பொது செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மைக்கு ரூ. 4.85 கோடி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்திற்கு துணை நிலை நீர்மேலாண்மை திட்ட மானியமாக ரூ.4.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன விவசாயிகள் கூடுதல் பலன்பெற புதிய திட்டம் இரு ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. நிலத்தடிநீர் மேம்பட்டுள்ள மயிலாடும்பாறை, கம்பம், போடி, ராசிங்காபுரம், சின்னமனுார், மார்க்கையன்கோட்டை பிர்காக்களில் ஆழ்துளை குழாய் அமைக்க அதிகபட்ச மானியம் ரூ.25 ஆயிரம், மின் மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், பைப் லைன் அமைக்க ரூ.10 ஆயிரம், தடைமட்ட தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம் வீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

புதிதாக சொட்டு நீர் பாசன வசதி செய்வோர், 7 ஆண்டுகளுக்கு முன் இவ் வசதிபெற்றோர் பயன்பெறலாம். விபரங்களுக்கு இணை, துணை, உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என தேனி வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X