பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் பருவ மழை தீவிரமடைய வாய்ப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டிவரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. வழக்கமாக முதல் போகத்திற்காக ஜூனில் தண்ணீர் திறக்கப்படும். நீர் இருப்பு குறைவு காரணமாக இந்த ஆண்டு திறக்க முடியவில்லை.

தென்மேற்குபருவமழை ஜூன் 1 ல் துவங்கி நீர்ப்பிடிப்பில் சாரலாகவே பெய்து வருகிறது. நீர்மட்டமும் சற்று உயர்ந்து 114.70 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது.நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கலாம் என்ற கருத்து விவசாயிகளிடம் உள்ளது. நேற்று அதிகாலையில் மழை சற்று தீவிரமடைந்தது. இதனால் அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளதால் நீர்திறப்பு குறித்து பொதுப்பணித்துறையினர் ஆலோசனை நடத்த வேண்டும்.

தீவிரமடைய வாய்ப்பு
கூடலுார் விவசாயி ஜெயபால் கூறியதாவது:2019 ல் ஜூன், ஜூலையில் மழை குறைவாக இருந்தது. ஆகஸ்ட்டில் மழை தீவிரமடைந்து அந்தமாதம் 29ல் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக இருந்தது.

சில நாட்களாக நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதுடன் தீவிரமடையும் வாய்ப்பும் உள்ளது. நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்க்க ஒரு மாதம் ஆகும். தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட சற்று கூடுதலாக திறந்து விட்டால் நாற்றுகள் வளர்த்துவிடலாம். தாமதமானால் இருபோக சாகுபடியை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X