பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் தலைதுாக்கும் போலி பட்டா  விவகாரம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானலில் மீண்டும் அரசு தரிசு நிலங்கள் போலி பட்டா மூலம் விற்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.கொடைக்கான வட்டாரத்தில் அரசு தரிசு நிலங்கள் போலியாக பட்டா பெறப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக அனுபவத்தில் இருந்தன. இவ்வகையில் 400 ஏக்கருக்கும் மேலாக அரசு நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டன.

ஆய்வு செய்ததில், 'நிலமில்லா விவசாயிகளுக்கு வழங்கிய நிலம்' என்ற போர்வையில் பட்டா மோசடி தெரிய வந்தது. அப்போதைய ஆர்.டி.ஓ., சுரேந்திரன், காரணமான வருவாய்த் துறையி னரை இடமாற்றம் செய்து 300 க்கும் மேற்பட்ட போலி பட்டாக்களை ரத்து செய்தார்.இதில் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் மாபியாக்கள், பலமாதங்கள் கடந்தபின், தற்போது மீண்டும் வருவாய் அதிகாரிகளை பயன்படுத்தி போலிகளை புதுப்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.மாவட்ட நிர்வாகம் முறைகேட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X