கொரோனா காரணமாக மாவட்டங்கள் விட்டு செல்ல தடை உள்ளது. சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. திருமணம் போன்ற விழாக்களும் விமரிசையாக நடப்பதில்லை.இதனால் கடந்த நான்கு மாதங்களாக மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் சுற்றுலா வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் பாதித்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிதியுதவி கூட டிரைவர்கள் பலருக்கு கிடைக்க வில்லை.ஒட்டன்சத்திரம் வேன் உரிமையாளர் சவடமுத்து: நான்கு மாதங்களாக வேன்கள் இயக்கமின்றி ஒரே இடத்தில் நிற்பதால், டயர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன இன்சூரன்ஸ், தகுதிச் சான்று பெறுவதற்கான காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
தற்போதுள்ள வேன்களை மீண்டும் பயன்படுத்துவதற்கே ரூ.15 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். அரசு உதவ வேண்டும், என்றார்.வேன் உரிமையாளர் பிரபு: மாவட்டங்களுக் கிடையே இ - பாஸ் இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். வேன்கள் இயங்காததால் பேட்டரியை மீண்டும் பயன்படுத்துவது சிரமம். பொதுப் போக்குவரத்தை அனுமதித்து சுற்றுலா தலங்களை திறந்தால்தான் இத்தொழில் நடக்கும். இ.எம்.ஐ., கட்டுபவர்களிடம் வட்டியுடன் சேர்த்துதான் வசூலிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE