கஞ்சா பதுக்கிய 10 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா பதுக்கிய 10 பேர் கைது

Added : ஜூலை 30, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல், பழநியில் கஞ்சா வைத்திருந்ததாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் ஆர்.வி.நகர். முனியப்பன் கோவில் தெருவில் சிலர் கஞ்சா பதுக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அப்பகுதியில் தனிப்படை போலீசார்சோதனை செய்ததில் கார்த்திக்குமார் 23, குணசீலன் 20, ஆகியோர் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் வேடசந்தூர் அருகே 2 1/2 கிலோ கஞ்சா பதுக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெய்க்காரபட்டி: பழநி அருகே நெய்க்காரப்பட்டி வேலுாரை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்50, பாஸ்கரன் 37. இந்திராநகர் காலனியில் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். தாலுகா போலீசார் அவர்களை கைது செய்து, 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X