ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

Added : ஜூலை 30, 2020
Share
போடி:போடியில் ரோட்டரி கிளப் ஆப் போடிநாயக்கனுார் புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட ஆளுநர் ஜெயக்ன் தலைமையில் நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை ஆளுநர் செல்வக்குமார், தலைவர் துரைப்பாண்டியன், மாவட்ட செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரஞ்சித்திற்கு மாவட்ட ஆளுநர் ஜெயக்ன் பதவியேற்பு செய்து வைத்தார். செயலாளராக
 ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

போடி:போடியில் ரோட்டரி கிளப் ஆப் போடிநாயக்கனுார் புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட ஆளுநர் ஜெயக்ன் தலைமையில் நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை ஆளுநர் செல்வக்குமார், தலைவர் துரைப்பாண்டியன், மாவட்ட செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரஞ்சித்திற்கு மாவட்ட ஆளுநர் ஜெயக்ன் பதவியேற்பு செய்து வைத்தார். செயலாளராக பாண்டியராஜ், பொருளாளராக மகேஸ்வரன், துணைத்தலைவராக சங்கிலிக்காளை, இணைச்செயலாளராக மாரிமுத்து, சேவை திட்ட மாவட்ட தலைவர் தமிழ்க்குமார், ஆலோசகராக விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டனர். சேவை திட்டத்தினை தொழிலதிபர்கள் ஜெகஜோதி, பிச்சை துவக்கி வைத்தனர். கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டன.

விழாவில் போடி ரோட்ராக்ட் முதல் தலைவர் ராஜாஅழகணன், ஜே.ஜே.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்கள் செல்வின், ரிச்சர்ட், சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வேதா, ஜனனி சிட் பண்ட் உரிமையாளர் சந்தோஷ்குமார், வின்னர் பிராய்லர் பார்ம் உரிமையாளர் மாரிமுத்து, ஸ்ரீ மாரி ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஹரிஹரன், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன், வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்கள் நாகராஜன், வெங்கடேஷ்குமார், ஸ்ரீ முருகாம்பாள் ஸ்வீட்ஸ் உரிமையாளர் சத்தியமூர்த்தி, பழனிசெட்டிபட்டி குறிஞ்சி பைப்ஸ் அன்டு எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ், அண்ணாமலையார் பைனான்ஸ் சர்வீஸ் உரிமையாளர் பிரேம்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X