தேனியில் 133 பேருக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் 133 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 30, 2020
Share

தேனி:தேனிமாவட்டத்தில் டாக்டர், நர்ஸ், வங்கி பணியாளர் உட்பட 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி அல்லிநகரம் 80 வயது முதியவர், ஆண்டிபட்டி காமராஜர் நகர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 34 வயது டாக்டர், ராஜதானி ஆரம்ப சுகாதார நிலைய 29 வயது நர்ஸ், மீனாட்சி சுந்தரநாடார் தெரு ஒன்றரை வயது ஆண் குழந்தை, சின்னமனுார் போலீஸ் குடியிருப்பு 4 வயது ஆண் குழந்தை, அம்மச்சியாபுரம் 70 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவக்கல்லுாரி வளாக பொதுத்துறை வங்கியின் போடியை சேர்ந்த 43 வயது எழுத்தர், கீழவடகரை 11 வயது சிறுவன், மேல் மங்கலம் 73 வயது முதியவர், மதுரை எழுமலை 29 வயது ஆண், திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் 21 வயது இளம்பெண், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி 54 வயது பெண் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X