ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று சோனியா ஆலோசனை | Sonia Gandhi calls meeting of Rajya Sabha MPs today | Dinamalar

ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று சோனியா ஆலோசனை

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (15) | |
புதுடில்லி: ''காங்கிரஸ் கட்சிக்கு, முழு நேர தலைவரை தேர்வு செய்வது, அவசியமானது என காங். மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் குரல் எழுப்பியுள்ள நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா இன்று (ஜூலை 30-ல்) ராஜ்யசாப எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது ராகுலை மீண்டும் தலைவராக்குவது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.2019- லோக்சபா தேர்தல் தோல்வியையடுத்து காங்., தலைவர்
Sonia Gandhi, congress, rahul gandhi

புதுடில்லி: ''காங்கிரஸ் கட்சிக்கு, முழு நேர தலைவரை தேர்வு செய்வது, அவசியமானது என காங். மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் குரல் எழுப்பியுள்ள நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா இன்று (ஜூலை 30-ல்) ராஜ்யசாப எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது ராகுலை மீண்டும் தலைவராக்குவது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2019- லோக்சபா தேர்தல் தோல்வியையடுத்து காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக அவரது தாயார் சோனியா, ஓராண்டாக நீடிக்கிறார். இதனால் காங்கிரஸ் முழு நேர தலைவரின்றி இயங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுலை மீண்டும் தலைவராக பொறுப்பேற்கச் செய்வதில், கட்சியின் சில தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.


latest tamil news
இதையடுத்து இன்று ஜூலை 30-ம் தேதி சோனியா தலைமையில் காங்.ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது, ராகுலை மீண்டும் தலைவராக்குவது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X