பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் சொத்துக்களை முடக்க 44 அதிகாரிகளுக்கு அதிகாரம்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
terrorist, terrorism, india, பயங்கரவாதி, சொத்து, முடக்கம், அதிகாரி, அதிகாரம்

புதுடில்லி : பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்வோரின் சொத்துக்களை முடக்குவதற்கான அதிகாரம் அரசு மூத்த அதிகாரிகள் 44 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்வோருக்கு சொந்தமான நிதி சொத்துக்கள் ஆகியவற்றை முடக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகள் 44 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 51ஏ சட்டப் பிரிவை அமல்படுத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்த அதிகாரிகள் மத்திய மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் ரிசர்வ் வங்கி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நிதி புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.இவர்கள் போலீஸ் சி.பி.ஐ. அமலாக்கத் துறை உட்பட சட்டத்தை காக்கும் அமைப்பினருக்கு பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்க உதவி செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-202016:17:53 IST Report Abuse
Arv Sekar அப்படியென்றால் கருணாநிதி சொத்து முடக்கப்படுமா ?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
30-ஜூலை-202015:48:14 IST Report Abuse
Vijay D Ratnam சிட்டிலயே தேடாதிங்கப்பா, கொஞ்சம் இறங்கி வந்து வலைவீசுங்க கொள்ளப்பெரு சிக்குவாய்ங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒரு பதினைந்து இருபது வருடத்துக்கு முன் குடும்ப சொத்து என்று எதுவும் இல்லாமல், சோத்துக்கு சிங்கியடிச்சிக்கிட்டு, டீ க்கு கூட வக்கில்லாமல், படிப்பறிவும் இல்லாமல், எந்த வேலைக்கும் லாயக்கில்லாமல் திரிந்துகொண்டு இருந்தவிங்க திடிரென்று 15, 20, வருடங்களில் பெருங் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் லிஸ்டை எடுத்து அதுல அவுங்கள தேடுறது அவ்ளோ கஷ்டமா என்ன.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
30-ஜூலை-202015:37:15 IST Report Abuse
தமிழர்நீதி அரசு தீவிரவாதம் அதன் பின்னணி பிஜேபி அமைச்சர்கள் . இவர்களின் சொத்தை எப்போது அரசுடைமையாக்குவார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X