* கை ரேகையால் கைதான பின்னணி தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய வெள்ளைச்சாமி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

* கை ரேகையால் கைதான பின்னணி தமிழகம் முழுவதும் 'கைவரிசை' காட்டிய வெள்ளைச்சாமி 

Added : ஜூலை 30, 2020
Share
 * கை ரேகையால் கைதான பின்னணி தமிழகம் முழுவதும் 'கைவரிசை'  காட்டிய  வெள்ளைச்சாமி 

மதுரை:தமிழகம் முழுவதும் வீடு, வங்கிகளில் கைவரிசை காட்டிய சிவகங்கை மாவட்டம் சக்கந்தி வெள்ளைச்சாமி 30, மதுரை நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் நகை, பணத்திற்காக ராணுவ வீரரின் தாயார், மனைவி கொல்லப்பட்டனர். பழைய குற்றவாளிகளை போலீசார் தேடினர். மே 7 திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த வெள்ளைச்சாமியிடம் விசாரித்த போது, கொலையில் தொடர்பு இல்லை எனத்தெரிந்தது. கைரேகையை மதுரை நகர் குற்றப்பிரிவு துணைகமிஷனர் பழனிகுமார் ஆய்வு செய்தபோது, ஜூன் 15ல் மதுரை உத்தங்குடியில் பாலகிருஷ்ணன் வீட்டில் ஆடி காரின் சாவி, ரூ.20 ஆயிரம், ஜெர்மன் வாட்ச் திருடுபோன வழக்கில் ஒத்துபோனது.

அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: வெள்ளைச்சாமி மீது மதுரை, சிவகங்கை உட்பட தமிழகத்தில் 35 வழக்குகள் உள்ளன. வங்கி கொள்ளையிலும் தொடர்பு உண்டு. காஸ் சிலிண்டர் மூலம் லாக்கரை திறந்து கொள்ளையடிப்பது இவரது ஸ்டைல், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X