சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய பாதிப்பு 225; பலி 9 மதுரையில் 8 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் 8 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர். இது மொத்த பாதிப்பில் 75 சதவீதமாகும். புதிதாக 225 பேர் பாதிக்கப்பட்டனர். 9 பேர் பலியாகினர்.

மதுரை மாவட்டத்தில் புதிதாக பாதித்தோரில் 188 பேர் மதுரை நகரை சேர்ந்தவர்கள். 37 பேர் புறநகரில் வசிப்பவர்கள். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மதுரை மாநகராட்சியின் இரு சுகாதார ஆய்வாளர்கள் அடங்குவர். மொத்த பாதிப்பு 10,618 ஆக உயர்ந்தது. புதிதாக 113 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 7995 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 75 சதவீதமாகும். ஒருபுறம் பாதிப்பு தொடர்ந்தாலும் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 2392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 65 வயது முதியவர், 50, 48, 45, 44 வயது ஆண்கள், 73, 65 வயது மூதாட்டிகள், 57, 43 வயது பெண்கள் பலியாகினர். இதுவரை 231 பேர் இறப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். திண்டுக்கல் 55திண்டுக்கல்லில் 17 பெண்கள் உட்பட 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2622 பேராக உயர்ந்துள்ளது. நேற்று 149 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தவிர திண்டுக்கல்லைச் சேர்ந்த 58 வயது அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் பழநியைச் சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.தேனி 133தேனி 7, ஆண்டிபட்டி 16, பெரியகுளம் 49, போடி 32, உத்தமபாளையம் 5, சின்னமனுார் 11, வருஷநாடு 10, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என நேற்று 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

பெரியகுளம் கீழவடகரை பெருமாள் கோயில்தெரு 54 வயது பெண், தேனி பங்களாமேடு 2வது தெரு 55 வயது வழக்கறிஞர், கூடலுாரை சேர்ந்த 36 வயது பெண் ,ஆண்டிபட்டி சக்கம்பட்டி 34 வயது பெண், உத்தமபாளையம் 81 வயது முதியவர் பலியாயினர். மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. நேற்று 213 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.ராமநாதபுரம் 35ராமாநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 118 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சிவகங்கை 36

கொரோனா தொற்றில் இருந்து இம்மாவட்டத்தை சேர்ந்த 43 பேர் பூரண குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். 36 பேர் மட்டுமே தொற்றுடன் அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை - 7, காரைக்குடி- 19, திருப்புத்துார் - 4, சிங்கம்புணரி- 3, தேவகோட்டை - 2, மானாமதுரை - 1 உட்பட 36 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டனர். இங்கு தொற்றுடன் சிகிச்சையில் இருந்த தேவகோட்டை 72 வயது முதியவர், திருப்புத்துார் 55 வயது பெண் பலியானார்.

விருதுநகர் 799

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துாரில் தலா ஒரு டாக்டர், சிவகாசி, திருத்தங்கல், சாத்துார், அருப்புக்கோட்டையில் 8 போலீசார், பந்தல்குடியில் 30 பேர் உட்பட நேற்று ஒரே நாளில் 799 பேருக்கு கொரோனா உறுதியானது.கொரோனா பாதித்த திருச்சுழி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மதுரை தனியார் மருத்துவமனையில் பலியானார். நேற்று 502 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

திருநெல்வேலி 382

திருநெல்வேலியில் நேற்று இரண்டு டாக்டர்கள் உள்பட 382 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இருவர் இறந்தனர்.தென்காசி 64தென்காசியில் நேற்று 64 பேருக்கு தொற்று உறுதியானது. ஒருவர் பலியானார். இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். தற்போது 951 பேர் சிகிச்சையில் உள்ளனர்.துாத்துக்குடி 316துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 316 பேருக்கு தொற்று உறுதியானது. 377 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று இருவர் பலியாகினர். தற்போது 2429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X