பொது செய்தி

தமிழ்நாடு

அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் கொரோனாவிற்கு மாவட்டம்தோறும் சித்தா சிகிச்சை மையம் துவக்க வழக்கு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மதுரை:கொரோனாவிற்கு சிகிச்சை பெற, மாவட்டம்தோறும் சித்த மருத்துவ மையங்களை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: கேரளா, கோவாவில் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை மத்திய ஆயுஷ்துறை பரிந்துரைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த பலர் சித்தா சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவிற்கு வசதிகள் செய்து தருவதில்லை. போதிய டாக்டர், பணியாளர்கள் இல்லை.கொரோனா பாதித்தோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற, மாவட்டந்தோறும் சித்த மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஓம்பிரகாஷ் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில், 'அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுகிறது. 891 சித்தா டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அரசு ரூ.186 கோடி நிதி ஒதுக்கியுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.தமிழக வருவாய் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சித்தா நிறுவன இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்பி செப்.,9 க்குநீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X