கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக எல்லையில் கேரள மருத்துவக்கழிவு: அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மதுரை:தமிழக எல்லையில் கேரள மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டு குவிக்கப்படுவதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

செங்கோட்டை அருகே புளியரை பரவன்பற்றுகளம் மாடசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் கோட்டைவாசல் உள்ளது. அருகே புளியரை ஊராட்சியில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. அரிசி, தானியம், விவசாய விளை பொருட்களை கிராம மக்கள் கொண்டு செல்லும்போது, ஆவணங்களை சமர்ப்பித்தாலும் போலீசார் தடுக்கின்றனர்.

புளியரை சோதனைச் சாவடியிலிருந்து, 5 கி.மீ.,துாரத்தில் கோட்டைவாசல் உள்ளது. இடைப்பட்ட பகுதியில் கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக் கழிவுகள் உட்பட பல கழிவுகளை குவிக்கின்றனர். எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.m கோட்டைவாசலில் 30 ஆண்டுகளுக்கு முன் சோதனைச் சாவடி செயல்பட்டது. மீண்டும் அங்கு மாற்றக்கோரி தென்காசி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மாடசாமி குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: தமிழக எல்லையில் கேரள மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு குவிக்கப்படுவதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தென்காசி கலெக்டர், எஸ்.பி., ஆக.,17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X