மலேசியாவில் தவிக்கும் புதுச்சேரி வாலிபர் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?| Dinamalar

இந்தியா

மலேசியாவில் தவிக்கும் புதுச்சேரி வாலிபர் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

Added : ஜூலை 30, 2020
Share

புதுச்சேரி; மலேசியாவில் உடல்நிலை பாதித்து பரிதவிக்கும் புதுச்சேரி வாலிபரை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்டிகை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாகூர் அடுத்த ஆதிங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் அகிலன்,22; மலேசியா, கோலாலம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்ட அகிலன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சக ஊழியர்களால் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் முறையிட்டனர். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அகிலன் உடல்நிலை குறித்த அச்சத்தால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.மேலும் அகிலன் உடனே இந்தியா திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X