இந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஏற்பாடு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

புதுச்சேரி,; ஏனாமில் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை வழங்குவதற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஏற்பாடு செய்துள்ளார்.ஏனாம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்றுவரை 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றில் இருந்து குணமடைந்து 58 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; 3 பேர் இறந்துள்ளனர். தற்போது, மருத்துவமனையில் 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு தங்களுக்கு பிடிக்கவில்லை என சிகிச்சை பெறும் கொரோனா நோயாளி வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டார். இதை பார்த்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தான் நடத்தும் ஏனாம் முதியோர் இல்ல அறக்கட்டளை மூலமாக கொரோனா நோயாளிகள் விரும்பும் உணவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.இதன்படி, ஒரு நாளைக்கு பிரியாணி, மற்ற நாட்களில் சாதத்துடன் சிக்கன், மட்டன், முட்டை, வாழை, பப்பாளி உள்ளிட்ட பழங்களுடன் கூடிய உணவு வழங்கப்படுகிறது. பல வகையான பொறியல்களும் தரப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏனாம் முதியோர் இல்ல டிரஸ்ட் மூலமாக தினசரி 800ல் இருந்து 1000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X