கேபிள் பாஜ., மாநில செயற்குழு வலியுறுத்தல்| Dinamalar

இந்தியா

கேபிள் பாஜ., மாநில செயற்குழு வலியுறுத்தல்

Added : ஜூலை 30, 2020
Share

புதுச்சேரி; புதுச்சேரியில், பாஜ., மாநில செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர்கள் செல்வம், மோகன்குமார் முன்னிலை வகித்தனர். இதில், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த தேர்தலின் போது காங்., அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளதை கண்டிப்பது. மத்திய அரசின் நலத்திட்டங்களை புதுச்சேரி ஆளும் காங்., அரசு நடைமுறைப்படுத்தாமல் தடுத்து வருவதை கண்டிப்பது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு, சென்டாக்கில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரும்பார்த்தபுரம், திருகாஞ்சி மேம்பாலத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேபிள் டி.வி., தொடர்பாக நடந்துள்ள வரி ஏய்ப்பு குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும்.கேபிள் டி.வி.,யை அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியார் மதுபான ஆலையில் நடந்த போலி ஹாலோ கிராம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். அமுதசுரபி, பாசிக், கே.வி.கே உள்ளிட்ட நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போடாததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X