பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சை செலவு ரூ.5 லட்சம்: தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் எச்சரிக்கை

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

பெங்களூரு: கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலித்த பிரபல மருத்துவமனைக்கு மாநில அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கொரோனாவிற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 -ம் தேதி 64 வயதான கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை கட்டணம் ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் காப்பீடு கட்டணத்தின் படி பில்லிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் கட்டணத் தொகையால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன் . இது குறித்தும் பல முறை எச்சரித்தேன். குறிப்பிட்ட மருத்துவமனை அரசின் வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கைகளையும் கவனிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை கட்டணம் ரூ.9 லட்சம் வசூலித்துள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news




இதனிடையே சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் மகன் எனது தந்தை இன்னும் மருத்துவமனையில் இருப்பதால் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும், எனது தந்தை குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியே கொண்டு வருவதுதான் முதல்பணி. இது குறித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் இந்த விசயத்தை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என கூறி உள்ளார். நோயாளியின் மகனும் மருத்துவத்துறையில் உள்ளார் என கூறப்படுகிறது.


latest tamil news




ಬೆಂಗಳೂರಿನ ಶೇಷಾದ್ರಿಪುರಂ ಅಪೋಲೋ ಆಸ್ಪತ್ರೆಯಿಂದ ಸಾರ್ವಜನಿಕರಿಗೆ ಹೆಚ್ಚು ತೊಂದರೆಯಾಗ್ತಿದೆ ಎಂದು ತಿಳಿದು ಬಂದಿದೆ. ಈಗಾಗಲೇ ಅನೇಕ ಬಾರಿ ಆ ಆಸ್ಪತ್ರೆಗೆ ವಾರ್ನ್ ಮಾಡಿದ್ದೇನೆ. ಆದರೂ ಇಂದು ಕೊರೊನಾ ರೋಗಿಗೆ 5 ಲಕ್ಷ ಬಿಲ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಎನ್ನುವ ಸುದ್ದಿ ಕೇಳಿ ಆಘಾತವಾಯಿತು 1/2 pic.twitter.com/hoWD1JRfxU

— Dr Sudhakar K (@mla_sudhakar) July 29, 2020


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
30-ஜூலை-202015:29:00 IST Report Abuse
தமிழர்நீதி பிஜேபி ஆட்சி என்றால் சும்மாவா.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூலை-202012:15:59 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மருத்துவமனைகளுக்கு கோடி கணக்கில் லோன் கேட்டாலும் உடனடியாக அனுமதி. இதன் காரனம் எப்படியும் பணம் சம்பாதித்து விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கைதான் வங்கிகளுக்கு ..ஆனால் அப்பாவி மக்கள் இவர்கள் விடும் கதையை நம்பி பல லச்சங்களை கடன் வாங்கி நகைகளை அடகு வைத்தோ விற்றோ கொண்டு கொடுக்கிறார்கள் ...இறைவனுக்கே வெளிச்சம்
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
30-ஜூலை-202009:58:27 IST Report Abuse
visu எந்த ஆதாரமும் இன்றி இப்படி பேசுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X