இந்தியா

மதகடிப்பட்டு சாலை சேதம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருக்கனுார்; திருக்கனுார் - மதகடிப்பட்டு செல்லும் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருக்கனுாரில் இருந்து மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், குச்சிப்பாளையம் வழியாக தினமும் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் மதகடிப்பட்டு, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இந்நிலையில், திருக்கனுார்- மதகடிப்பட்டு வரையில் உள்ள 10 கி.மீட்டர் சாலையில், வாதானுார், பி.எஸ்.பாளையம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்துள்ள திருக்கனுார் - மதகடிப்பட்டு சாலையை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X