இந்தியா

வேளாண் கல்லுாரி சேர்க்கை ஆக. ௧௦க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்கால் வேளாண் கல்லுாரியில் இந்தஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து கல்லுாரி முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:காரைக்காலில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லுாரியில் இளநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு பயில தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி அரசு ஒடுக்கீடுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.சுயநிதி பங்களிப்பு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீடுகளுக்கான விண்ணப்பங்களை www.pajancoa.ac.in என்ற இணையதளத்தில் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரம் வேண்டுவோர் முதல்வர், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் என்ற முகவரியிலோ அல்லது 04368 -261473, 261372 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X