காரைக்காலில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்| Dinamalar

இந்தியா

காரைக்காலில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 30, 2020
Share

காரைக்கால்; காரைக்காலில் அங்கன்வாடி ஊழியர்கள், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன்,பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மாத இறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத நிலுவை தொகையை உடன் வழங்க வலியுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X