4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி; 10 ரெப்ரிஜிரேட்டர்! ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டில், 4 கிலோ, 372 கிராம் தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக, அரசு தரப்பில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜெயலலிதா வசித்த வீடு,
gold, silver, Jayalalitha House, தங்கம், வெள்ளி, ஜெயலலிதா வீடு

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டில், 4 கிலோ, 372 கிராம் தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக, அரசு தரப்பில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜெயலலிதா வசித்த வீடு, அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு உள்ளது.

வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரம், தற்போது வெளியாகி உள்ளது. வீடு, தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்டது. வீட்டில், இரண்டு மாமரம், ஒரு பலா மரம், ஐந்து தென்னை மரங்கள், ஐந்து வாழை மரங்கள் உள்ளன.

அரசிதழில் சொத்து பட்டியல் வெளியீடு


latest tamil news


வீட்டில், 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள, 14 வகையான தங்க ஆபரணங்கள்; 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள, 867 வெள்ளி பொருட்கள்; 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. மேலும், 11 'டிவி'க்கள்; 10 ரெப்ரிஜிரேட்டர்; 38 'ஏசி'க்கள்; சமையல் அறை தவிர்த்து, பிற அறைகளில், 556 மரப் பொருட்கள்; 6,514 சமையல் பாத்திரங்கள்; 12 சமையல் அலமாரிகள்; 1,055 அலங்காரப் பொருட்கள்; 15 பூஜை பாத்திரங்கள்; 10 ஆயிரத்து, 438 துணி வகைகள்; 29 டெலிபோன் மற்றும் மொபைல் போன்கள்; சமையல் அறையில், 221 எலக்ட்ரிக் சாதனங்கள் உள்ளன.

இதுதவிர, 8,376 புத்தகங்கள்; 394 நினைவுப் பரிசுகள்; 653 ஆவணங்கள்; 253 எழுது பொருட்கள்; 65 சூட்கேஸ்கள்; 108 அழகு சாதனப் பொருட்கள்; ஆறு கடிகாரங்கள்; ஒரு நகலெடுப்பு இயந்திரம்; ஒரு லேசர் பிரின்டர்; 959 இதர பொருட்கள் என, மொத்தம், 32 ஆயிரத்து, 721 பொருட்கள் உள்ளன. இவ்விபரங்கள், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31-ஜூலை-202005:35:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதென்ன அதிசயம் முன்னாள் இந்நாள் என்று இருக்கும் 98%திமுக அண்ட் அதிமுக கவுன்சிலர் டு மந்திரிகள் எல்லார்வீட்டையும் ஒட்டி ஒளிச்சாள் இன்னம்பல லக்ஷம் கொடிக்கல்லே தீருமே நம்ம நாட்டிலே அரசியலுக்குவருவதே சுலபமா சொத்து சேர்க்கவே தான் ஒரு நடிகையாக எவ்ளோ வாங்கிருக்கலாம் அப்போதெல்லாம் சிவாஜி எம்ஜி ஆர் ஜெமினி என் டீ ஆர் எல்லாம் பிரபலமான ஹீரோக்கள் எல்லோரும் கூட ரஜினிணையானதாரா கமல் போல கொடிக்கல்லே சம்பளம் வாங்கலேயே லக்ஷமகளே தான் ஒரு ரூபா சம்பளம் ஒரு சி எம் வாங்கினார் அப்பொது தங்கம் 40000க்கு விக்கலியே . தவிர கோர்டுலேயே பல நகைகள் போச்சு அதெல்லாம் கணக்குலே இல்லியா அன்று வசதியாக இருந்தவர்கள் எல்லோரும் தங்கம் வெளிலே தான் இன்வெஸ்ட் பண்ணாங்க நிலங்கள் வாங்கினவாலும் உண்டே.நடிகைக்கு மௌஸ் போனால் வாழ வகை வேண்டும் என்று சாந்தியமக்களுக்கு சேர்த்தவை ஏராளம் சசியின் கூடாநடப்பு வில்லங்கமாயாச்சு இவ்ளோபெரிய பங்களாவை ஒரு கல்லூரியாகவே ஆக்கலாம் பழகுலமந்தைகளுக்கு எதிர்காலம் நன்னா அமையும் ஜெயாவின் ஆன்மா சாந்தி அடையும்
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
31-ஜூலை-202002:28:40 IST Report Abuse
chenar சங்கரமடத்தின் சொத்தில் புள்ளி ஒரு விழுக்காடு கூட வரவில்லையே
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
31-ஜூலை-202000:56:29 IST Report Abuse
vns நாஞ்சில் முருகேசன் (முன்னாள் AIADMK MLA) POSCO வில் கைதுசெய்யப்பட்ட விவரம் ஏன் பதிவு செய்யவில்லை. மலையாள ஊடகங்களில் இந்தச் செய்தி பரவுகிறது.
Rate this:
Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா
31-ஜூலை-202005:08:15 IST Report Abuse
Ayyathurai Balasinghamஅப்போ போலி மிசா கைதியை எந்த சட்டத்தில் கைது செய்வது? அவரு ஆடாத ஆட்டமா இவிங்க ஆடிட போறாங்க . குருநாதரே அவர் தானப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X