பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்மா தானம் முன்வந்த வாலிபர்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை:
கடந்த இரு வாரங்களுக்கு முன், சூலுாரை சேர்ந்த, 30 வயது வாலிபர் ஒருவர், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.நேற்று, கோவை அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்ட அந்த நபர், மற்றவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க, தான் பிளாஸ்மா தானத்துக்கு முன்வருவதாக தெரிவித்தார்.கோவை அரசு மருத்துவமனை 'டீன்' காளிதாஸ் கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், பிளாஸ்மா தானம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூலூரை சேர்ந்த வாலிபர், பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்து, விவரங்களை தெரிவித்துள்ளார். இதேபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்த மற்றவர்களும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X