பொது செய்தி

தமிழ்நாடு

பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது; பலருக்கு வலை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை:

கோவையில், பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை ராமநாதபுரம் பகுதியில், எம்.எல்.எம்., நிறுவனம் இயங்கி வந்தது. நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, 100க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தனர். துவக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு வட்டிப் பணத்தை வழங்கிய நிறுவனம், கடந்த மே மாதம் முதல் பணம் தரவில்லை. முதலீட்டாளர்கள் கேட்டபோது, முறையான பதில் தெரிவிக்கவில்லை. நேற்று காலை, நிறுவனத்தின் உரிமையாளர் இல்லத்தை, 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முதலீட்டாளர்கள், கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.இதில், உரிமையாளர்களான மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர்,60 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X