பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் 'ஆன்லைன் கவுன்சிலிங்': சான்றிதழ் பதிவேற்றம் நாளை துவக்கம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement


சென்னை:

இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' சான்றிதழ் பதிவேற்றும் வசதி, நாளை துவங்குகிறது.இதுகுறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.ஜூலை, 15 முதல், நேற்று வரை, 1.21 லட்சம் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 93 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்.மொத்தம், 1,768 மாணவர்களுக்கு தொலைபேசியிலும், 4,556 மாணவர்களுக்கு, 'இ - மெயில்' வழியாகவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு நேரில் நடத்தப்பட்டது. இந்த முறை, கொரோனா தொற்று பிரச்னை காரணமாக, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.எனவே மாணவர்கள்,www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில், வீட்டில் இருந்தபடியே, சான்றிதழ் பிரதிகளை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு நாளை துவங்க உள்ளது. ஆக., 20 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்.விண்ணப்ப பதிவு வரிசை எண்களின் அடிப்படையில், இரண்டு நாட்களில், 20 ஆயிரம் பேர் வீதம் சான்றிதழ் பதிவேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது.ஜூலை, 31 முதல், ஆக., 1 வரை, 2,00,001 முதல், 2,20,000 வரை பதிவு எண் உள்ள மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றலாம்.இதேபோல், தினமும், 20 ஆயிரம் பேர் வீதம், ஆக., 11 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம். விடுபட்ட மாணவர்கள், ஆக., 12 முதல், 20ம் தேதி வரை பதிவேற்றலாம்.இதுகுறித்து, பதிவேற்றம் செய்ய, 044 - 2235 1014, 2235 1015 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து, விளக்கமான வீடியோ பதிவுகள், இன்ஜினியரிங் விண்ணப்பபதிவு இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், அனுபவம் உள்ள பேராசிரியர்கள், சேவை மையங்கள் வழியே, ஆக.,24 முதல் செப்., வரை சரிபார்க்கப்படும். மாணவர் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X