அடுத்த நூற்றாண்டுக்கான சவாலை எதிர்கொள்ளும் கல்விக் கொள்கை: வானதி சீனிவாசன் கருத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த நூற்றாண்டுக்கான சவாலை எதிர்கொள்ளும் கல்விக் கொள்கை: வானதி சீனிவாசன் கருத்து

Added : ஜூலை 30, 2020
Share


கோவை:

''அடுத்த நுாற்றாண்டுக்கான சவாலோடு போட்டி போட வைப்பதற்கான மிகப்பெரிய அடித்தளத்தை, புதிய தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும்,'' என, பா.ஜ.,மாநில துணைத்தலைவர் வானதிசீனிவாசன் கூறினார்.புதிய கல்விக்கொள்கை குறித்து, வானதிசீனிவாசன் கூறியதாவது:ஆரம்பக்கல்வியில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வாயிலாக கல்வி கற்பிப்பது கட்டாயம். தாய்மொழிக்கு புதிய கல்விக்கொள்கையில் முக்கியத்துவம் அளிப்பதை வேகப்படுத்தும்.எந்தெந்த பகுதிக்கு எந்ததெந்தமாதிரியான கல்வி தேவையோ அதை ஆய்வு செய்து அப்பகுதி மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, அதற்கான, ஆய்வகம், நுாலகம், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை பெருக்குவதற்கு உதவியாக இருப்பதோடு, சாதாரண மாணவர்களும் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்குப்பின், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களிடம் பொதுவெளியில் வைத்து கருத்து கேட்டு உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் கல்விக்கான மிகப்பெரிய சீர்திருத்தம் இது. தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை உள்வாங்கிக்கொண்டு, அடுத்த நுாற்றாண்டுக்கான சவாலோடு போட்டி போட வைப்பதற்கான மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X