பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பலி 9 ஆனது; தொற்று 680 ஆக உயர்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 680 ஆக உயர்ந்த நிலையில், பலி எண்ணிக்கை, ஒன்பதானது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 656 பேர் கொரோனாவால் பாதித்தனர். நேற்று புதிதாக, 24 பேர் பாதிக்கப்பட்டு, 680 ஆக உயர்ந்தது. இந்த, 24 பேரும், ஈரோடு மாநகராட்சி பகுதியில், 16 பேரும், மீதி புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த, 75 வயது முதியவர், கொரோனா பாதித்து, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த, 25ல் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்தது. இதுவரை, 471 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X