பொது செய்தி

தமிழ்நாடு

ஹெக்டேருக்கு 5 டன் நிலக்கடலை மகசூல்: சாதனை படைத்த சென்னிமலை விவசாயி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஈரோடு: சென்னிமலை அருகே, எல்லை கிராமத்தை சேர்ந்த விவசாயி அருண்குமார், 35; வேளாண் அலுவலகத்தில் இருந்து, புது நிலக்கடலை ரகங்களை பெற்று, கிணற்றுப்பாசனம் மூலம், ஆண்டுக்கு இரண்டு போகம் சாகுபடி செய்து வருகிறார். வேளாண் துறை ஆலோசனைப்படி, தொழில் நுணுக்கங்களை பயன்படுத்தி, ஒரு ?ஹக்டேரில், ஐந்து டன் மகசூல் எடுத்துள்ளார். இது, தேசிய அளவில் சாதனை என்று, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.


இதுகுறித்து, ஈரோடு உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஆசைதம்பி, சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சங்கர் கூறியதாவது: தேசிய அளவில் நிலக்கடலை சராசரி உற்பத்தி திறன், ஹெக்டேருக்கு, 1,269 கிலோ. இதுவே தமிழகத்தில், 2,720 கிலோவாக உள்ளது. ஆனால், சென்னிமலை விவசாயி அருண்குமார், ஐந்து டன் வரை மகசூல் பெற்றுள்ளார். இது தேசிய சராசரியைவிட நான்கு மடங்கும், தமிழக சராசரியைவிட இரண்டு மடங்கும் அதிகம். இவரது தோட்டத்தில் ஒரு செடிக்கு, 30 முதல், 40 காய் பிடித்துள்ளது. அருண்குமாரை பாராட்டி, சிறந்த உழவருக்கான வெகுமதியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X