பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்.,கள் மீது குற்றச்சாட்டு; டாக்டரின் 'வாய்ஸ்' பரிசோதனை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, பெரியார் நகரில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்க்கப்பட்ட, 23 வயது இளம்பெண், பிரசவத்தின் போது உயிரிழந்தார். இறந்த இளம்பெண்ணின் உறவினர், ஈரோட்டில் உள்ள எலும்பு முறிவு டாக்டர் சக்தி கணலிடம் பேசியபோது, 'பிரேத பரிசோதனையில் உண்மையை மறைக்க, ஈரோடு அரசு மருத்துவமனையில் ஐந்து லட்சமும், கோவை ஜி.ஹெச்.,சில் ஆறு லட்சம் ரூபாயும் வாங்குவார்கள் என்று' கூறிய, வாய்ஸ் ரிக்கார்டிங் சமூக வலைதளங்களில் பரவியது. அவர் மீது, ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, அரசு மருத்துவமனை போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சக்தி கணல் பேசியதாக கூறப்படும், ஆடியோ வாய்சை, ஒப்பீடு செய்ய, ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடக்கும். மேலும், இது தொடர்பாக, உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X