பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ., கைது கோரி நகராட்சி ஊழியர் போராட்டம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, தினசரி மார்க்கெட் சாலையை ஆக்கிரமித்து, 20 கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். கடைகளை அகற்ற நகராட்சி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, ஆக்கிரமிப்பு கடைகளின் முன், நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனங்களை, நகராட்சி ஊழியர்கள் நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், முன்னாள் இ.கம்யூ.,- எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடைகளுக்கு சம்பந்தமில்லாத, 50 பேருடன் சேர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட, மாஜி எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி, நகராட்சி தூய்மை பணியாளர், ஊழியர்கள் என, 60க்கும் மேற்பட்டோர், நேற்று பணியை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, நகராட்சி கமிஷனர் முத்துக்குமாரிடம் மனுவும் வழங்கினர். கொரோனா சமயத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது; உடனடியாக பணிக்கு திரும்புமாறு, கமிஷனர் கூறவே, அனைவரும் பணிக்கு திரும்பினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில், மூன்று மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X