தமிழ்நாடு

59 சதவீதம் பேர் 'டிஸ்சார்ஜ்' திருப்பூரில் நல்ல முன்னேற்றம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 24 வயதுள்ள ஆண் போலீஸ், அரசு மருத்துவமனையில், 26 வயது செவிலியர், குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 45 வயது ஆண் மருத்துவ உதவியாளர்; மாநகராட்சியில், சுகாதார மேற்பார்வையாளரான, 49 வயது ஆண், பி.என்., ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மருந்தாளுனராக உள்ள, 23 வயது பெண் உட்பட, 37 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 795 ஆக உயர்ந்துள்ளது கோவை மற்றும் திருப்பூரில் சிகிச்சை பெற்று வந்த, 26 பேர், நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 472 பேர் குணமாகி வீடு திரும்பினர். இது 59 சதவீதம். தாராபுரத்தில், சிகிச்சை பெற்று வந்த, 59 வயது பெண் நேற்று உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X