பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்போருக்கு கடன் அட்டை வினியோகம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஈரோடு: கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும், 10 ஆயிரத்து, 320 விவசாயிகளுக்கு, மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில், (கே.சி.சி.,) கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். புதிதாக இணைவோர், இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். ஏற்கனவே கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போர், மூன்று லட்சம் ரூபாய் வரை பெறலாம். டttணீண்://தீதீதீ.ணீட்டுடிண்ச்ண.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு போட்டோக்களை இணைத்து, அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் சமர்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X