பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் மாநகர செயலாளர்கள் நியமனம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகர மாவட்டத்தில், மாநகர அ.தி.மு.க., பகுதி செயலாளர்களாக, 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஈரோடு மாநகராட்சி பகுதியில், இதுவரை அ.தி.மு.க.,வில், ஏழு பகுதி செயலாளர்கள் செயல்பட்டனர். இதில், பி.பி.அக்ரஹாரத்தை பிரித்து அசோகபுரம் என்றும், ஏற்கனவே இருந்து நீக்கம் செய்யப்பட்ட பெரியசேமூரில், மீண்டும் பகுதி செயலாளர் பதவியை உருவாக்கி, ஒன்பது பகுதியாக மாற்றி உள்ளனர். கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், புதிய பகுதி செயலாளர் பெயரை, நேற்றுமுன்தினம் வெளியிட்டனர். இதன்படி பகுதி செயலாளர்களாக, வீரப்பன்சத்திரம் - கேசவமூர்த்தி, பெரியார் நகர் - மனோகரன், கருங்கல்பாளையம் - முருகசேகர், அசோகபுரம் - ஜெயராஜ் என்ற முனுசாமி, பி.பி.அக்ரஹாரம் - ராமசாமி, சூரியம்பாளையம் - கே.சி.பழனிசாமி, பெரியசேமூர் - தங்கமுத்து, சூரம்பட்டி - ஜெகதீசன், காசிபாளையம் - கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பி.பி.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரத்தை பிரித்து அசோகபுரமும், சூரியம்பாளையத்தை பிரித்து பெரியசேமூரும் புதிதாக ஏற்படுத்தி உள்ளனர். பெரியசேமூர், அசோகபுரம், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் மட்டும் ஆறு வார்டும், பிற பகுதியில் ஏழு வார்டும் அமைந்துள்ளது. புதிய பட்டியல்படி, மாநகர மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆதரவாளர்களாக ஜெகதீசன், முருகுசேகர், ஜெயராஜ், கேசவமூர்த்தி, தங்கமுத்து, கோவிந்தராஜும், எம்.எல்.ஏ., தென்னரசு ஆதரவாளராக ராமசாமியும் உள்ளனர். பெரியார் நகர் மனோகரன், சூரியம்பாளையம் கே.சி.பழனிசாமி தனித்து செயல்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X