பொது செய்தி

தமிழ்நாடு

கடன் தவணை செலுத்த மகளிர் குழுவுக்கு சலுகை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருப்பூர்:

மகளிர் குழுவினர், கடனைத் திருப்பி செலுத்துவதில் இருந்து, ஆக., வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், வேலையிழந்துள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறியதாவது: முறையாக கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. முதன்முறை பெற்ற கடனை, முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கு, இணைப்புக்கடன் இரண்டாம் முறை வழங்கவும், வட்டி விகிதத்தை குறைத்தும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடன் தவணைகளை திருப்பி செலுத்த, மார்ச் முதல் மே மாதம் வரை சலுகையும் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, ஜூன், ஜூலை, ஆக., மாதங்களுக்கும் தவணைகளை திருப்பி செலுத்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.மகளிர் குழுவினர் யாரும், இதற்காக எந்த அரசு அலுவலகத்துக்கும் சென்று விண்ணப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X