பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை விலை கூடியது; சம்பங்கி 'ரேட்' எகிறியது

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஈரோடு: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர், கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 3,070 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 92.79 ரூபாய் முதல், 101.71 ரூபாய்; இரண்டாம் தரம், 35.99 ரூபாய் முதல், 100.30 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1.26 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், 600 மூட்டை கூடுதலாக வரத்தாகி, கிலோவுக்கு இரண்டு ரூபாய் வரை விலை உயர்ந்தது.

*எழுமாத்தூர் சொசைட்டியில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் குவிண்டால், 9,567, ரூபாய் முதல், 10 ஆயிரத்து, 59 ரூபாய்; இரண்டாம் தரம், 5,589 ரூபாய் முதல், 8,667 ரூபாய் வரை விலை போனது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, குவிண்டாலுக்கு, 290 ரூபாய் விலை கூடியது.


*மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 3.34 டன் காய்கள் வரத்தாகின. டன், 24 ஆயிரத்து, 890 ரூபாய் முதல், 32 ஆயிரத்து, 410 ரூபாய் வரை ஏலம் போனது. கடந்த வார ஏலத்தை விட, டன்னுக்கு, 1,560, ரூபாய் விலை அதிகரித்தது.


*சத்தி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம், 2,700 மூட்டைகள் வரத்தாகின. குவிண்டால், 3,790-4,660 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 45 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


*அந்தியூர் சொசைட்டியில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. காய்ந்த நிலக்கடலை கிலோ, 54.59 ரூபாய் முதல் ?5 ரூபாய் வரை, பச்சை நிலக்கடலை, 23.67 ரூபாய் முதல், 32 ரூபாய் வரை விலை போனது.


* கர்நாடகா மாநிலத்தில், வரலட்சுமி விரதம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் பெங்களூரு, கொள்ளேகால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, சத்தியமங்கலத்தில் இருந்து, சம்பங்கி பூக்கள் நேற்று அதிகளவில் அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால், கிலோ, 20 ரூபாய்க்கு சரிந்த சம்பங்கி, 70 ரூபாயாக உயர்ந்தது. இதனால் சம்பங்கி பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


*எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 52 ஆயிரத்து, 961 கிலோ வரத்தானது. முதல் தரம் குவிண்டால், 9,769 ரூபாய் முதல், 10 ஆயிரத்து, 215 ரூபாய் வரை விலை போனது. இரண்டாம் தரம், 5,666 ரூபாய் முதல், 9,779 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட, குவிண்டாலுக்கு, 178 ரூபாய் விலை கூடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X