இரவில் தந்தம் கடத்திய நான்கு பேர் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவில் தந்தம் கடத்திய நான்கு பேர் சிக்கினர்

Added : ஜூலை 30, 2020
Share
கோபி: டி.என்.,பாளையம் அருகே, இரவில் தந்தம் கடத்திய, நான்கு பேர் சிக்கினர். டி.என்.,பாளையம் வனச்சரக குழுவினர், கோபி அருகே கணக்கம்பாளையம் பிரிவில், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரு டூவீலர்களில் வந்த நான்கு பேரிடம், இரண்டு யானை தந்தம் இருந்தது. விசாரணையில், தொட்டகோம்பை பழனிச்சாமி, 50; அந்தியூர், பூனாச்சியை சேர்ந்த அங்கப்பன், 54, ஆண்டவர், 47, கோவிந்தராஜன், 42, என

கோபி: டி.என்.,பாளையம் அருகே, இரவில் தந்தம் கடத்திய, நான்கு பேர் சிக்கினர். டி.என்.,பாளையம் வனச்சரக குழுவினர், கோபி அருகே கணக்கம்பாளையம் பிரிவில், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரு டூவீலர்களில் வந்த நான்கு பேரிடம், இரண்டு யானை தந்தம் இருந்தது. விசாரணையில், தொட்டகோம்பை பழனிச்சாமி, 50; அந்தியூர், பூனாச்சியை சேர்ந்த அங்கப்பன், 54, ஆண்டவர், 47, கோவிந்தராஜன், 42, என தெரிந்தது. டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தந்தம் கடத்தலில், வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என, நான்கு பேரிடமும் விசாரணை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X