மனைவி தற்கொலை: கணவர் தலைமறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி தற்கொலை: கணவர் தலைமறைவு

Added : ஜூலை 30, 2020
Share

பவானி: மனைவி தற்கொலை வழக்கில், கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பவானி அருகே மாரப்பாளையத்தை சேர்ந்தவர் அருளானந்தம், 42; லட்சுமி நகரில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவரின் மனைவி நேத்ராவதி. தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படுமாம். இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த நேத்ராவதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார், நேத்ராவதி உடலை, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நேத்ராவதி உறவினர்கள் புகாரின்படி, தற்கொலைக்கு தூண்டியதாக, அருளானந்தம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X