மகள் மாயம்; தாய் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்; தாய் புகார்

Added : ஜூலை 30, 2020
Share

ஈரோடு: ஈரோட்டில், மகள் மாயமாகி விட்டதாக, தாய் புகார் தந்துள்ளார். ஈரோடு, நாராயண வலசு, அம்பேத்கர் நகரை சேர்ந்த, சுப்பிரமணி மகள் லட்சுமி, 23, எம்.காம்., பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சீனிவாசன், 26; காதலித்த இருவரும், மூன்றாண்டுக்கு முன், பதிவு திருமணம் செய்து கொண்டனர். விவாகரத்து தொடர்பான மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 27ல் வீட்டில் இருந்த லட்சுமி மாயமாகி விட்டார். சீனிவாசன் அழைத்து சென்றிருக்கலாம் என்றும், மகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, லட்சுமியின் தாய் வள்ளி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X