தமிழ்நாடு

புதிதாக 123 பேருக்கு தொற்று: 34 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சேலம்: ஒரே நாளில், 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் குணம் அடைந்ததால், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


சேலம் மாவட்டம், மாநகர் எல்லைகளில் நடக்கும் பரிசோதனையில், தொற்று கண்டறியப்படும் நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தனிமையில் உள்ளனர். அவர்களில், சேலத்தில், 23 பேர், வாழப்பாடி, ஓமலூர், தலா 2, அயோத்தியாப்பட்டணம், வீரகனூர், மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி, ராசிபுரம், தலா ஒருவர் என, 34 பேர் குணம் அடைந்ததால், நேற்று, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதில், 12 ஆண்கள், 22 பெண்கள் அடங்கும். நேற்று, சேலத்தில் புதிதாக, 123 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சேலம் மாநகரில், 75 பேர், மகுடஞ்சாவடி, 5, வீரபாண்டி, 13, ஓமலூர், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், தலா, 3, நங்கவள்ளி, 2, ஆத்தூர், வாழவந்தி, தலா, 4, சேலம் ஒன்றியம், கொங்கணாபுரம், தலைவாசல், வாழப்பாடி, தலா ஒருவர் என, மாவட்டத்தில், 116 பேர். இதுதவிர, சென்னை, வேலூர், நாமக்கல், தலா ஒருவர், விருதுநகர், 3 பேர், பெங்களூரு ஒருவர் என, 123 பேர், புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில், 371 பேர் உள்ளனர். இதுவரை, 3,428 பேர், மாவட்டத்தில், கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகர கடன் சங்கம் மூடல்: அம்மாபேட்டை நகர கூட்டுறவு கடன் சங்கத்தில், இரு எழுத்தருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சங்க ரேஷன்கடை எடையாளரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், கடன் சங்கம் மூடப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர் குடும்பத்தில் 3 பேர்: ஏற்காடு, தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், ஜெரீனாக்காட்டைச் சேர்ந்த தாய், மகளுக்கும், கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு, சேலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர், ஏற்காடு இல்லம், சரபங்கா குடிலில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்து கொண்டனர். அதன் முடிவு, நேற்று வெளியானது. அதில், தீயணைப்பு வீரரின், 30 வயது மனைவி, 10 வயது மகன், 6 வயது மகளுக்கு, கொரோனா உறுதியானது. அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், தாய், மகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தில், ஜெரீனாக்காட்டைச் சேர்ந்த, 23 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. அவர், சேலத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X