பொது செய்தி

தமிழ்நாடு

பூரண குணமடைந்த 7 பேருக்கு 'ஆரோக்கிய சேது' பெட்டகம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஆத்தூர்: தொற்றில் இருந்து குணமடைந்த ஏழு பேருக்கு, 'ஆரோக்கிய சேது' பெட்டகம் வழங்கி, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


ஆத்தூர் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட, ஆத்தூர், கடைவீதியைச் சேர்ந்த மூன்று பேர், தெற்கு உடையார்பாளையம், வாழப்பாடியைச் சேர்ந்த தலா இருவர் குணம் அடைந்தனர். அவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான மருந்து, மாத்திரை உள்ளிட்ட, 'ஆரோக்கியசேது' பெட்டகம், பழங்கள் வழங்கி, நேற்று, மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். அத்துடன், வீட்டில், 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். இதுகுறித்து, மருத்துவ குழுவினர் கூறுகையில், 'ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கடந்த ஜூன், 17 முதல், இதுவரை, 189 பேர், கொரோனாவால் அனுமதிக்கப்பட்டனர். அதில், 18 பேர், சேலத்துக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை, 135 பேர் குணமாகியுள்ளனர். 36 பேர் சிகிச்சையில் உள்ளனர்' என்றனர்.

ஆத்தூர் சுகாதார மாவட்டம்: பெரம்பலூர், தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும், ஆத்தூர், நேரு நகரை சேர்ந்த, 21 வயது ஆண்; நரசிங்கபுரம், 33 வயது ஆண்; பெத்தநாயக்கன்பாளையம், கோபாலபுரம், 21 வயது ஆண்; தலைவாசல், பட்டுத்துறை, 40 வயது ஆண் ஆகியோருக்கு, நேற்று, கொரோனா உறுதியானது. அதேபோல், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, 39 வயது; உடையாப்பட்டி, 20 வயது; பனமரத்துப்பட்டி, எஸ்.ஆட்டையாம்பட்டி, 55 வயது ஆகிய ஆண்களுக்கும், தொற்று உறுதியானது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஏழு பேருக்கு தொற்று உறுதியாகி, ஆத்தூர், சேலம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்ணுக்கு உறுதி: கொங்கணாபுரத்தைச் சேர்ந்த, 56 வயது ஆண் தொழிலாளி, உடல்நிலை சரியில்லாமல், சேலத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, கடந்த, 26ல் தொற்று உறுதியாகி, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது, 43 வயது மனைவிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. அவர், காகாபாளையம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.

முதியவர் பலி: ஆத்தூர், பழையபேட்டை, கடைவீதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 76. அதே பகுதியில் மளிகை கடை நடத்திவந்தார். கடந்த, 20ல், தொற்றால் பாதிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது தொடர்பில், குடும்பத்தினர் ஏழு பேர் உள்பட, 12 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதில், மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X