பொது செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டி வட்டாரத்தில் இதுவரை 102 பேர் பாதிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

வீரபாண்டி: ஒரே குடும்பத்தில் நான்கு பேர் உள்பட, ஏழு பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம், வீரபாண்டி வட்டாரத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்தது. வீரபாண்டி வட்டாரம், சீரகாபாடியில், கர்ப்பிணிக்கு, கடந்த மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரம், ஆட்டையாம்பட்டியில், 60 வயது முதியவர் தொற்றால் உயிரிழந்தார். இதை தொடர்ந்து, சுற்றுவட்டார பகுதிகளில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மளமளவென அதிகரித்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில், ஆட்டையாம்பட்டி, சென்னகிரி, இருசனம்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தில், 37 வயது ஆண், 32 வயது பெண், 11, 7 வயது சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். சேலத்தில், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும், ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையத்தை சேர்ந்த, 20 வயது பெண், மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலகத்தில் தினக்கூலி ஊழியராக பணிபுரியும், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த, 40, 35 வயது பெண்கள் என, ஒன்பது பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம், வீரபாண்டி வட்டாரத்தில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 102 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 34 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X