பொது செய்தி

இந்தியா

பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
BPCL, Bharat Petroleum, petroleum, பாரத் பெட்ரோலியம், பிபி, டோட்டல், வெளிநாட்டு நிறுவனங்கள், பின்வாங்கல்

புதுடில்லி: 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், 'பி.பி., மற்றும் டோட்டல்' ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்துள்ளது.

பிரிட்டீஷ் பெட்ரோலியம் என முன்னர் அழைக்கப்பட்ட, பி.பி., நிறுவனம் மற்றும் பிரான்சைச் சேர்ந்த டோட்டல் நிறுவனம் ஆகியவை, பாரத் பெட்ரோலியத்தை வாங்கும் முயற்சியிலிருந்து பின் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கும் சிக்கலான இடங்கள் மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை காரணமாக, இவை இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, மும்பை மற்றும் கொச்சியில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவாக்கம் செய்வதோ அல்லது புதிய ஆலை அமைப்பதோ முடியாத காரியம் என, கருதுகின்றனர்.


latest tamil news


மொத்தம், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதும் சிரமமாக இருக்கும் என்கின்றனர்.பாரத் பெட்ரோலியம் நாட்டின் மூன்றாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமாகும். மேலும் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமும் ஆகும்.தற்போது பாரத் பெட்ரோலியத்தில் அரசு தன் வசம் இருக்கும், 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்நெப்ட், சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ, உள்நாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், ஏல முயற்சியில் ஈடுபடும் என, கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
30-ஜூலை-202018:25:47 IST Report Abuse
Chandramoulli அரசு நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர் . ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த தொழிலாளர்களுடன் எவ்வளவு லாபம் ஈட்டுகிறார்கள் தெரியுமா . அரசில் தொழிலாளர்கள் என்ற பெயரில் யூனியன் நபர்கள் ஆக்கிரமிப்பு அதிகம். வேலை செய்வதே கிடையாது . லாபம் வானத்தில் இருந்தா கொட்டும் .
Rate this:
Cancel
30-ஜூலை-202015:40:43 IST Report Abuse
தமிழ் எந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்தாலும் இந்த பெட்ரோலிய நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் மட்டுமே இயங்குகிறது. ஏதோ ஒரு தனியார் நிறுவனம் லாபமடைய லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தை பொய்யாக நஷ்டக்கணக்குக்காட்டி விற்றுவிட துடிக்கிறது இந்த மோடி அரசாங்கம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஜூலை-202015:01:56 IST Report Abuse
மலரின் மகள் பங்கு விலை வேகமாக ஏறியது, அது இறங்கும் என்று தெரிகிறது. அப்போது வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X