பொது செய்தி

தமிழ்நாடு

மா, கொய்யா நடவுக்கு மானியம் பெறலாம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, ஒரு ஹெக்டேரில், மா அடர் நடவு செய்ய, 9,666 ரூபாய், கொய்யா அடர் நடவுக்கு, 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், நுண்ணீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன்பெற முடியும். குறைந்த இலக்குகள் மட்டும் உள்ளதால், முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும். அதனால், விவசாயிகள், நிலத்தின் பட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், இரு புகைப்படம் ஆகியவற்றுடன், தோட்டக்கலை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 98657 55987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X