பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி கட்டணம் குறித்து புகார்: விளக்கம் கேட்காததால் பெற்றோர் பாதிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சேலம்: தனியார் பள்ளிக்கு கட்டணம் செலுத்துதல் குறித்த உத்தரவில், பெற்றோர் தரப்பு விளக்கம் கேட்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற நீதிபதிக்கு, வக்கீல் புகார் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, சேலம் வக்கீல் சந்திரசேகரன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனு: சேலம் நீதிமன்றத்தில் பணிபுரிகிறேன். குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். வழக்கமான பணி நடக்காததால் வருமானமின்றி சிரமப்படுகிறேன். தனியார் பள்ளி கட்டணம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில், 40 சதவீத கட்டணத்தை உடனேவும், 35 சதவீத கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பெற்றோர் தரப்பில் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. ஊரடங்கால் பெற்றோர் வேலையின்றி, அன்றாட குடும்ப செலவுக்கே கஷ்டப்படும் நிலை உள்ளது. வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோர்தான் கல்வி கற்பிக்கின்றனர். அதற்கு, பள்ளிக்கு எதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்பு கட்டமைப்பு இல்லாத மாணவர்களும், கட்டணம் செலுத்த வற்புறுத்துகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அதேபோல், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது இல்லை. முழு ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் ஏன், இணையதள கற்பித்தல் உள்ளிட்ட பணியில் ஈடுபடவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலம் என்னவாகும்? இவற்றை பரிசீலித்து, நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீதும், கட்டாய வசூல் செய்யும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X