சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்கார புகார்: சித்தப்பா மீது 'போக்சோ'

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தலைவாசல்: சிறுமி பலாத்கார புகாரில், சித்தப்பா மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.


தலைவாசல், வீரகனூரை சேர்ந்த, ரீட்டா, ராஜ் தம்பதிக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு பின்புறம், ஏழு மாத பெண் குழந்தையை கண்டெடுத்து வளர்த்து வந்தனர். தம்பதியின் முதல் மகள் விமலா, அவரது கணவரை, தாய், தந்தை என, அச்சிறுமி அழைத்து வந்தார். விமலாவின் தங்கை கிரேஸி, 33. இவரது முதல் கணவர் இறந்துவிட, ராயர்பாளையத்தில், 'வின் ஸ்டார் டிராவல்ஸ்' நடத்தும் செல்வம், 34, என்பவரை, கிரேஸி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களை, சித்தி, சித்தப்பா என, சிறுமி அழைத்து வந்தார். கடந்த, 2014ல், மூன்று பேர், சிறுமியை பலாத்காரம் செய்தனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு, சேலம் மகிளா நீதிமன்றம், கடந்த பிப்., 6ல், ஆயுள் தண்டனை வழங்கியது. இதில் ஒருவர் இறக்க, மற்ற இருவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில், சிறுமி, 10ம் வகுப்பு படிக்கிறார். ஆனால், கடந்த மூன்று ஆண்டாக, சித்தப்பா செல்வம், சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், நேற்று, சேலம், குழந்தைகள் நலக்குழும தலைவர் தாஸ் தலைமையில் குழுவினர், சிறுமியை மீட்டு விசாரித்தனர். பின், வீரகனூர் போலீசில் புகார் அளிக்க, செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X