பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசமின்றி பணியாற்றிய கட்டட தொழிலாளிகளுக்கு ரூ.5,000 அபராதம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தர்மபுரி: முக கவசம் அணியாமல் பணியாற்றிய, ஐந்து கட்டட தொழிலாளிகளுக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி நேற்று, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, அதியமான்கோட்டை வழியாக நேற்று சென்றார். அப்போது, அப்பகுதியில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த, ஐந்து தொழிலாளர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றி கொண்டிருந்ததை கண்டார். அவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இது குறித்து அவர், நல்லம்பள்ளி தாசில்தார் சரவணனுக்கு தகவல் தெரிவித்ததுடன், அபராத தொகை வசூலிக்கவும் உத்தரவிட்டார். முக கவசம் அணியாமல், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் அபராதமாக, 100 ரூபாய் மட்டும் வசூலிக்கும் நிலையில், மாவட்ட கலெக்டர் மலர்விழி தங்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்ததால், இரண்டு நாள் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாக, அவர்கள், அபராத தொகை வசூல் செய்ய வந்த, அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்படி, நல்லம்பள்ளி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், அந்த தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகையை, அதிகாரிகளிடம் செலுத்தினார். அபராதம் குறித்து கேட்க, கலெக்டர் மலர்விழி மற்றும் தாசில்தார் சரவணனிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டும், அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X