பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் டாக்டர் உட்பட 17 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, தனியார் மருத்துவமனை டாக்டர் உட்பட, 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில், நேற்று, பாலக்கோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய, 67 டாக்டர் மற்றும், 54 வயதுடைய அவரது உறவினர் பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. தர்மபுரி, இலக்கியம்பட்டியை சேர்ந்த, 16, 18 வயதுடைய இரு மாணவர்கள், 40, 70 வயதுடைய, இரு பெண்கள் உட்பட, மாவட்டத்தில் மொத்தம், 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவத்துறையினர், இலக்கியம்பட்டி, மாரியம்மன் கோவில் பகுதிக்கு, பஞ்., நிர்வாகம் மூலம், 'சீல்' வைத்தனர். மாவட்டத்தில் இதுவரை ?மொத்தம், 757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X