பொது செய்தி

தமிழ்நாடு

இணையவழி கருத்தரங்கு; பங்கேற்க அழைப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி சார்பில் நடத்தப்படும், இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்கலாம் என, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாப்பிரெட்டிப்பட்டி, பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகலை தமிழ்த்துறை சார்பில், தமிழ் இலக்கிய வகைமைகளில் சிற்றிலக்கியங்கள் என்ற தலைப்பில், இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் வரும், ஆக., 1 முதல், 7 வரை, காலை, 9:00 மணி முதல், 'யூ டியுப்' வழியாக நடக்கும். நிகழ்ச்சியில், இணைவதற்கான 'யூ டியுப்' இணைப்பு, பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு வழங்கப்படும். ஏழு நாட்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டு, பின்னூட்டப்படிவம் அனுப்புவோருக்கு, மின்னஞ்சல் மூலம், மின்சான்றிதழ் வழங்கப்படும். பதிவுப்படிவம், பின்னூட்ட படிவம், பதிவு செய்யும்போது, பெயர், மின்னஞ்சல் போன்ற விபர குறிப்புகளை, சரியாக பதிவு செய்யவும். பதிவுக்கட்டணம் இல்லை. பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு கருத்தரங்க தகவல்கள் நேரடியாக அனுப்பப்படும். இன்று, (30ம் தேதி) மாலைக்குள் பதிவுசெய்ய வேண்டும். விபரங்களுக்கு, 98654 14549 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X