தெருவிளக்கு பழுதால் பொதுமக்கள் அவஸ்தை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த மேஸ்திரி கொட்டாயில், மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் எரியாததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட, எர்ரணஹள்ளி பஞ்., மேஸ்திரி கொட்டாய் பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் நலன் கருதி, மூன்று ஆண்டுகளுக்கு முன் பஞ்., நிர்வாகம் சார்பில், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. தெருவிளக்குகள் போதிய பராமரிப்பு இல்லாததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவை சேதமானது. இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல், இங்குள்ள குடும்பத்தினர் இருளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள வனவிலங்கு, விஷ பூச்சிகள் மற்றும் தெருநாய்கள். இரவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், இரவில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, பழுதான தெருவிளக்குகளை சரி செய்து, இப்பகுதிக்கு மேலும் கூடுதலாக, புதிய தெருவிளக்குகளை அமைக்க வேண்டும் என, மேஸ்திரிகொட்டாய் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X