திறந்த நிலையில் சாக்கடை குழி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்| Dinamalar

திறந்த நிலையில் சாக்கடை குழி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Added : ஜூலை 30, 2020
Share

அரூர்: அரூரில், சாலையின் நடுவில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை குழியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, முருகர் கோவில் தெருவுக்கு செல்லும் சிமென்ட் சாலை சீரமைக்கும் பணி கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போது, சாலையின் நடுவில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு, மேலே கான்கிரீட் போடப்பட்டது. சாலை சீரமைக்கும் பணிகள் அவசரகதியில், பெயரளவுக்கு நடந்ததால், உள்ளேயிருந்த மரப்பலகைகள் வெளியே எடுக்கப்படாமல் விடப்பட்டது. தற்போது, சாலைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக உள்ளதுடன், இரும்பு கம்பிகள் மேலே தூக்கியுள்ளன. மேலும், சில இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் குழிகள் உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X