பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நேற்று 69 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று கிருஷ்ணகிரியில், 23 பேருக்கும், ஓசூரில், எட்டு வயது சிறுமி உட்பட, 21 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், மோரனஹள்ளியில், 28 வயது பெண்; ஊத்தங்கரையில், 26 வயது ஆண்; பில்லனகுப்பத்தில், 40 வயது ஆண்; போச்சம்பள்ளி, 29 வயது ஆண்; பர்கூர், 40, 42 வயது ஆண்கள் ஆகியோருக்கு தொற்று பாதித்தது. மேலும், பாலக்கோட்டை சேர்ந்த, 28 வயது பெண்; 23 வயது ஆண்; மோரமடுகில், 25, 55 வயது ஆண்கள்; தர்மபுரி மாவட்டம் ராமகொண்டள்ளியை சேர்ந்த, 26 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. தேன்கனிக்கோட்டையில், 25 வயது பெண், காவேரிப்பட்டணத்தில், 55 வயது பெண்; பத்தலப்பள்ளியில் நான்கு பேர்; பெருமாள் நாயக்கன்பட்டி, பெரியமுத்தூரில் தலா இருவர்; கெலமங்கலம், காவேரிப்பட்டணம், தம்மாண்டரபள்ளி, உப்பாரப்பள்ளி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் என, நேற்று மாவட்டத்தில் மொத்தம், 69 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு, 943ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X